“முருகன் அனைவருக்கும் நல்ல சக்தியை வழங்க வேண்டும்” – குமரி கோயிலில் வேல் பூஜை செய்த சுரேஷ் கோபி!
கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள வேளிமலை குமாரகோயில் முருகன் திருத்தலம் தமிழகம் மற்றும் கேரள பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. நவராத்திரி விழாவுக்காக இங்குள்ள முருகப்பெருமான் திருவனந்தபுரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இருமாநில அரசு விழாவாக கொண்டாடப்படும். பிரசித்தி பெற்ற வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சரான நடிகர் சுரேஷ் கோபி இன்று சுவாமி தரிசனம் செய்தார். திருச்சூர் தொகுதியில் எம்.பி-யாக வெற்றிபெற்ற நிலையில் பல்வெறு வழிபாடுத்தலங்களில்…









