Daily Archives: March 15, 2025

`ரூ.434 கோடி இழப்பீடு’- டெலிவரி ஊழியருக்கு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு! – என்ன நடந்தது? | Starbucks ordered to pay $50 million to delivery driver burned by hot coffee

கலிபோர்னியாவில் உள்ள நடுவர் மன்றம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தால் காயமடைந்த டெலிவரி ஓட்டுநருக்கு, இந்திய மதிப்பில் 434.78 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட சூடான பானம் சரியாக மூடப்படாததால் அந்த ஓட்டுநர் மீது சிந்தி, கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 8ல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மைகேல் கார்சியா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டார்பக்ஸ் ட்ரைவ்-த்ரூவில் ஆர்டர் எடுத்துள்ளார். நடுவர் மன்றம் கூறுவதன்படி, சரியாக மூடப்படாத…

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்! | virat kohli hints about his retirement

பெங்களூரு: மீண்டுமொரு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னால் பங்கேற்க முடியாமல் போகலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதன் மூலம் 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்தான் அவரது கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கும் என தெரிகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலிக்கு, அந்த தொடர் பசுமையான நினைவாக அமையவில்லை. மொத்தமே 190 ரன்கள் தான் எடுத்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 23.75. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின்…

சமைக்கும் கைகளுக்கு பெருமை சேர்க்கும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ – நாளை மாபெரும் இறுதிப்போட்டி! | samayal super star season 2 final will be held in chennai

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – மார்ச் 16) நடைபெறவுள்ளது. சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் போட்டி களைகட்டியது. தொலைகாட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா போட்டியின் நடுவராக…

தமிழ்நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் ஹஜ், உம்ரா பயண மோசடிகள் – கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்15 மார்ச் 2025, 11:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். தனது மனைவி ரெஜினாவுடன் உம்ராவுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மெக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார்.உறவினர்கள் மூலமாக சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனத்தின் முகவரான அமீதாவின் அறிமுகம் அப்துல் காதருக்கு கிடைத்துள்ளது. தனக்கும் தன் மனைவிக்கும் தலா 77 ஆயிரம் ரூபாயை அவர் பயணக் கட்டணமாகச்…

`Mr. Fix-lt-னா அது இவருதான்' – கே.எல் ராகுலைப் புகழ்ந்த மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கே.எல் ராகுலைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலமாக 3 -வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது. மிட்செல் ஸ்டார்க்இந்தத் தொடரில் அணியின் வெற்றிக்குப் பலரும் சிறப்பாகப் பங்காற்றி இருந்தார்கள். குறிப்பாக ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட கே.எல் ராகுல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான…

UPSC/TNPSC: மில் தொழிலாளியின் மகள் RDO ஆன கதை இதுதான் – பகிரும் ஆர்.டி.ஷாலினி

சிறிய ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று இளம் வயதிலேயே வருவாய் கோட்டாட்சியராக மதுரையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் ஆர்.டி.ஷாலினி.இலவச பயிற்சி முகாம்குடும்பச் சூழலை மனதில்கொண்டு, பொறுப்புடன் படித்து, உலகத்தின் போக்கை கவனித்து, தன்னம்பிக்கையுடன் முயற்சியும் பயிற்சியும் செய்தால் நினைத்த இலக்கை நிச்சயம் எட்டலாம் என்பதற்கு ஆர்.டி.ஷாலினி கடந்து வந்த பாதையை அரசு வேலை தேடுவோர் பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட வருவாய் கோட்டத்துக்கு ஆட்சியராக (R.D.O) வந்தது குறித்து அவரிடம் கேட்டபோது, “கோயம்புத்தூர் மாவட்டம் காரமடைதான்…

‘ஐபிஎல்லை வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்க வேண்டும்’ – இன்சமாம் வலியுறுத்தல் | ex pakistan captain Inzamam asks foreign cricket boards to boycott IPL

லாகூர்: ஐபிஎல் கிரிக்கெட்டை வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்கும் வகையில் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் கூறியுள்ளார். வரும் 22-ம் தேதி 18-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் உலக அளவில் நடைபெறும் விளையாட்டு தொடர்களில் முக்கியமானதாக அமைந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடு என உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கமிக்கும் களமாக ஐபிஎல் உள்ளது. இந்த நிலையில்…

சகுந்தலா பாண்ட்யா: 70 வயதிலும் சர்வதேச தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் இவர் யார்?

காணொளிக் குறிப்பு, 70 வயதிலும் தடகள வீராங்கனையாக பதக்கங்களை அள்ளும் சகுந்தலா பாண்ட்யா70 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் சகுந்தலா பாண்ட்யா5 நிமிடங்களுக்கு முன்னர்குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யாவுக்கு 70 வயதாகிறது. ஆனால் அவர் இப்போதும் ஒரு தடகள வீராங்கனை.”எனது தடகளப் பயணத்தை நான் 50 வயதில் தொடங்கினேன். 45 வயதில், எனக்கு முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருப்பது கண்டறியப்பட்டது. இது முழங்கால் மூட்டின் ஜவ்வு கிழிவதால் ஏற்படும் ஒரு நோயாகும். நான் மருத்துவர்களைக்…

‘2021 டி20 WC தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது!’ – வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சிப் பகிர்வு | indian cricketer varun chakravarthy rewinds threat post 2021 t20 world cup

சென்னை: அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்த வீரர்களில் முக்கியமானவர் வருண் சக்கரவர்த்தி. இந்த நிலையில் கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு தனக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் குறித்து அவர் பேசியுள்ளார். “2021 டி20 உலகக் கோப்பை தொடரில் என்னால் சரியாக செயல்பட முடியாமல் போனதை எண்ணி நான் மனதளவில் சோர்வடைந்தேன். டீமில் வாய்ப்பு கிடைத்தும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த…