Monthly Archives: January, 2025

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவை பாதிப்பு – பயணிகள் அவதி! | Fog disrupted flight and train services in northern states.

வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் தென்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் டெல்லியில் அருகில் இருப்பவர்களைக்கூட பார்க்க முடியவில்லை. மோசமான பனிமூட்டத்தால் டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து கிளம்பவேண்டிய 400 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது தவிர 100 ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் 2 லட்சம் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். ரயில்கள் ஆங்காங்கே அப்படியே நின்றன. அதிகமான ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.…

Yuzvendra Chahal: விவாகரத்து பெறப்போகிறாரா?- மனைவியுடனான புகைப்படங்களை நீக்கிய சஹால் |Dhanashree Verma And Yuzvendra Chahal Delete All Pics

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கூர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் என பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத்தான் யுவேந்திர சகல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமீபத்தில் யுவேந்திர சஹாலும் அவரின் மனைவியும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் சோஷியல் மீடியாவில் கிரிக்கெட்…

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு – சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை பற்றி டிஜிபி அறிக்கை

பட மூலாதாரம், Annamalai/Sowmiyaanbumani/Xபடக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன4 ஜனவரி 2025, 03:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்”அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் மட்டுமே உள்ளன. உண்மையான அக்கறையால் அல்ல. பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்?”அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக போராட்டம் நடத்த பாமகவுக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில்,…

உருமாறிய ரிஷப் பண்ட் – முதல் இன்னிங்ஸில் ‘அடி’ வாங்கிய பின் 2-வது இன்னிங்ஸில் ‘அதிரடி’! | Rishabh Pant hits in the second innings!

சிட்னி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான சனிக்கிழமை மட்டும் 15 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. ஸ்காட் போலண்டின் அசாதாரண துல்லிய பவுலிங்கும், இந்தியா முதல் இன்னிங்ஸ் லீடை பும்ரா இல்லாமலே சாதித்ததும், அனைத்துக்கும் மேலாக ரிஷப் பண்ட்டின் முற்றிலும் அவருடைய பாணியில் அதிரடியாக எடுத்த சாதனை அதிரடி அரைசதமும் பேசுபொருளாகியுள்ளன. விராட் கோலி வழக்கம் போல் போலண்டிடம் எட்ஜ் ஆகி வெளியேற, இறங்கிய ரிஷப் பண்ட் எதிர்கொண்ட போலண்ட்டின் முதல் பந்தை மேலேறி வந்து நேராக அதிரடி சிக்ஸர்…

“கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது” -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில் பெண்கள் நெகிழ்ச்சி | “College dream fulfilled” – women in `One Day Student’ program

இந்த ஒரு நாள் மாணவி திட்டத்தை பற்றி இல்லத்தரசிகளிடம் கேட்டபோது, “எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னோட பொண்ணுங்க வந்து இங்க படிக்கிறாங்க. நம்மளும் இப்படி கல்லூரி வகுப்பறையில் உக்காந்து படிக்கவேண்டும் என்ற ஆசை பல வருடமாக இருந்தது. அதெல்லாம் நடக்குமா! என்ற எண்ணம் இருந்தது. இப்போது, அது நடந்துருக்கிறது. இதற்கு காரணமான சக்திகைலாஷ் நிறுவனத்துக்கு நன்றி. மாணவிகளோடு மாணவிகளாக உக்காரும் போது, நம்மளும் படிக்க போகிறோம் என்றும் கல்லூரி அனுபவம் கிடைத்த ஒரு சந்தோஷம் கிடைத்திருக்கிறது”…

Virat Kohli : `இது அரசனுக்கு அழகில்லை' – 8 முறையும் ஒரே பாணியில் அவுட்டான கோலி!

சிட்னி டெஸ்ட் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எட்டியிருக்கிறது. மீண்டும் விராட் கோலி சோபிக்கவில்லை. வெறும் 6 ரன்களில் இந்த இன்னிங்ஸில் ஆட்டமிழந்திருக்கிறார். கோலி ரன் அடிக்கவில்லை என்பது ஏமாற்றம்தான். ஆனால், அதைவிட வருத்தமளிக்கக்கூடியது அவர் அவுட்டாகும் விதம்தான்.கோலிசூர்யா நடித்த ’24’ படத்தில் ஒரு காட்சி வரும். காலத்தை கட்டுப்படுத்தும் சக்தியுடைய வாட்ச்சை ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அணிந்து செல்வார் சூர்யா. மேட்ச்சில் தோனி ஒரு…

Hush Money Case: அமெரிக்க அதிபராகவுள்ள டிரம்புக்கு என்ன தண்டனை? ஜனவரி 10-ம் தேதி தீர்ப்பு

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்எழுதியவர், அன்னா லாம்சேபதவி, பிபிசி செய்திகள் 4 ஜனவரி 2025, 07:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்தன்னைப் பற்றிய தகவல்களை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருப்பதற்காக பணம் கொடுத்த விவகாரத்தில் (hush money), டொனால்ட் டிரம்புக்கு நியூயார்க்கில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி அன்று தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது. “டிரம்புக்கு சிறைத்தண்டனை, அபராதம்…

பந்த் அதிரடி; போலண்ட் அபாரம் – சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் முடிவு | Pant attack mode Boland impressive bowling Day 2 of Sydney Test ends

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இந்நிலையில், இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. சிட்னி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்னுக்கும், ஆஸ்திரேலியா 181 ரன்னுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்…

“உடலுக்கு நன்மை தரக்கூடிய 100 வகை உணவு” – களைகட்டிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி |Aval vikatan Samayal Super star Event at Tanjore

பின்னர் பேசிய செஃப் தீனா, “நாம் சமைக்கின்ற உணவை எப்போதும் வேஸ்ட் செய்யக்கூடாது” என கோரிக்கை வைத்தார். இதில் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். தாங்கள் சமைத்து எடுத்து வந்திருந்த உணவைத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டிஸ்ப்ளே செய்திருந்தனர் போட்டியாளர்கள். செஃப் தீனா, ஒவ்வொருவராக சென்று அந்த உணவை டேஸ்ட் செய்தார். கவிதா என்பவர் மட்டும் 21 வகையான உணவுகளுடன் போட்டியில் பங்கேற்று ஆச்சர்யப்படுத்தினார். சிறு…

Rohit Sharma : “விலகிதான் இருக்கிறேன்; ஓய்வு பெறவில்லை" – ரோஹித் சொன்ன விளக்கம்

பார்டர் கவாஸ்கர் தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தாமாக முன் வந்து போட்டியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.இந்நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறக்கூடும் என கணிப்புகள் வெளியானது. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரோஹித் இப்போது பேசியிருக்கிறார்Rohitசிட்னி மைதானத்தில் பேட்டியளித்த ரோஹித், “நானேதான் இந்தப் போட்டியிலிருந்து விலகினேன். பயிற்சியாளரோடும் தேர்வுக்குழுவினரோடும்…

1 26 27 28 29 30 32