Rashid Khan : மூன்று சகோதரர்களுடன் ஒரே மேடையில் ரஷீத் கானுக்கு திருமணம்! – வைரலாகும் புகைப்படங்கள் | Rashid Khan ties knot in a grand ceremony in Kabul
ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான் முன்னணி ஆல்ரவுண்டர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் ரஷீத் கானுக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது திருமணம் காபூலில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. ரஷித் கானுக்கு மட்டுமல்லாது, அவரது சகோதரர்களான ஆமிர் கலில், சகியுல்லா, ரசா கான் ஆகியோருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ரஷீத் கானுக்கும் அவரது 3 சகோதரர்களுக்கு ஒரே மேடையில் நடைபெற்ற திருமணம்நால்வரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்கும்…









