இந்தியாவில் அவசர கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் நேரடியாக வாங்க தடை வருமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அவசர கருத்தடை மாத்திரைகள் உட்பட அனைத்துவிதமான ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் மருந்துச்சீட்டு இல்லாமல் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட வேண்டுமா?நாடு முழுவதும் இந்த தடையை மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) அமல்படுத்தக் கூடும் என்று வெளியான செய்திகளால் தற்போது அவசர கருத்தடை மாத்திரைகள் தொடர்பான விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.இந்த மாத்திரைகளை நேரடியாக மருந்தகங்களில் வாங்க தேசிய அளவில் தடை ஏற்படலாம் என்று பெண்களும், பெண்கள் நல ஆர்வலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.…









