PV Sindhu: "இம்மாத இறுதியில் பி.வி.சிந்துவிற்குத் திருமணம்" – அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மணமகன் யார்?
இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு முறை வெள்ளியும், வெண்கலமும் வென்றவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்றிருக்கிறார். இவருக்கு இந்த மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பி.வி.சிந்துவுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த, போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான வெங்கட தத்தா சாயுக்கும், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டிசம்பர் 22ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது.பிவி சிந்துதிருமணத்திற்கு முன்பான நிகழ்ச்சிகள் 20ஆம் தேதி தொடங்குகின்றன. டிசம்பர் 24ஆம் தேதி…