Daily Archives: December 10, 2024

Bengaluru: மனைவியை குற்றம்சாட்டி 24 பக்க கடிதம்; உயிரை மாய்த்துக்கொண்ட 34 வயது இளைஞர்- என்ன நடந்தது? | Bengaluru Man Dies by hanging with 24 page letter accusing his wife

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பம் செய்த துன்புறுத்தல்களை 24 பக்க அளவுக்குக் கடிதமாக எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துள்ளார்.34 வயதான அதுல் சுபாஷ் ஏற்கெனவே அவரது மனைவியைப் பிரிந்துவிட்டார். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அவர், வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.சுபாஷ் வைத்திருந்த 24 பக்க கடிதத்தில் 4 பக்கம் கைப்படவும், 20 பக்கங்கள் டைப் செய்தும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தனக்கு நீதி வேண்டும்…

Aus Vs Ind : `சிராஜூக்கு அபராதம் விதித்திருக்கக் கூடாது!' – ஐ.சி.சி-யை விமர்சிக்கும் ஹர்பஜன் சிங்

பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது போட்டியில் ஹெட்டுக்கு எதிராக சிராஜ் ஸ்லெட்ஜ்ஜிங்கில் ஈடுபட்டிருந்தார். இதனால் ஹெட், சிராஜ் என இருவருக்குமே ஐ.சி.சி அபராதம் விதித்திருக்கிறது. ஐ.சி.சியின் நடவடிக்கையை ஹர்பஜன் சிங் இப்போது விமர்சித்திருக்கிறார்.ஹர்பஜன் சிங்ஹர்பஜன் பேசியிருப்பதாவது, “ஐ.சி.சி, வீரர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறது. இப்படியான விஷயங்களெல்லாம் மைதானத்தில் நடக்கவே செய்யும். இந்த மாதிரி விஷயங்களில் யார் சரி யார் தவறு என்பதை சொல்லவே முடியாது. அடிலெய்டில் நடந்ததை அடிலெய்டிலேயே விட்டுவிட வேண்டும். ஆனால், ஐ.சி.சி க்கென ஒரு குணமுண்டு.…

தெற்கு சூடான்: நேப்கின்களை உருவாக்கும் பயிற்சி கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?

காணொளிக் குறிப்பு, நேப்கின்களை உருவாக்கும் பயிற்சி கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?நேப்கின்களை உருவாக்கும் பயிற்சி கிராமப்புற மாணவிகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?19 நிமிடங்களுக்கு முன்னர்தெற்கு சூடானில் மாதவிடாய் சுழற்சி மற்றும் அது தொடர்பான போதுமான தகவல்கள் மற்றும் நேப்கின்கள் வாங்குவதற்கு போதுமான பணம் இல்லாத காரணத்தால் பெண்கள் பெரும் அவதியுறுகின்றனர்.பள்ளிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்து ஆய்ஷா ஜூவான் சிமோன் பயிற்சி அளித்து வருகிறார்.கிராமப்புறங்களில் உள்ள மாணவிகளுக்கு மறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் நேப்கின்களை எப்படி உருவாக்குவது…

ரிஷப் பந்தின் பேட்டிங் அணுகுமுறையை பாராட்டிய ஹாரி புரூக்! | Harry Brook praises Rishabh Pant s aggressive batting approach

வெலிங்டன்: இந்திய அணியின் விக்கெட் பேட்ஸ்மேனான ரிஷப் பந்தின் பேட்டிங் அணுகுமுறையாக மனதார பாராட்டியுள்ளார் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக். “முதல் பந்தை எதிர்கொண்ட போது ரிஷப் பந்த் அதை அணுகிய விதத்தை நீங்கள் பார்த்தீர்களா என்று எனக்கு தெரியாது. பிட்ச்சில் இறங்கி வந்து பந்தை விளாசினார். அதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். அதை நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக களத்தில் செய்து வருகிறோம். நாங்கள் களத்தில் ரன் குவிக்கவே விரும்புகிறோம், சர்வைவ் செய்ய அல்ல. இதை…

மும்பை: சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதிய மாநகராட்சி பேருந்து – 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

மும்பையில் மாநகராட்சி பஸ் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது. மும்பை குர்லா மேற்கு பகுதியில் இருந்து அந்தேரியை நோக்கி மாநகராட்சி பெஸ்ட் பேருந்து ஒன்று நேற்று இரவு 9.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ் குறுகலான சாலையில் சென்றது. அந்த சாலையின் இருபக்கமும் வாகனங்கள் குறிப்பாக கார்கள், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பஸ் மார்க்கெட்டில் வந்த போது எதிரில் மற்றொரு எலக்ட்ரிக் பஸ் வந்தது. அந்த…

“அடுத்த முறை Dr. வெங்கடேஷாக இருப்பேன்”- கல்வி குறித்துப் பேசிய வெங்கடேஷ் ஐயர் | Venkatesh Iyer about eduaction

“நீங்கள் உயிரிழக்கும் வரை கல்விதான் எப்போதும் உடனிருக்கும். ஒரு கிரிக்கெட் வீரரால் 60 வயது வரை விளையாட முடியாது”- வெங்கடேஷ் ஐயர்Published:Yesterday at 2 PMUpdated:Yesterday at 2 PMவெங்கடேஷ் ஐயர் நன்றி

கோவை: ஆயுள்கைதி தயாரித்த சோலார் ஆட்டோ – சிறைவாசிக்கு குவியும் பாராட்டு

பட மூலாதாரம், PRISON DEPARTMENTபடக்குறிப்பு, சோலார் ஆட்டோ இடைவிடாமல் 200 கி.மீ. வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதுகட்டுரை தகவல்கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற சிறைவாசி ஒருவர் தயாரித்துள்ள சோலார் ஆட்டோ பல தரப்பிலும் பாராட்டைப் பெற்றுள்ளது. கோவை மத்திய சிறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறிய தகவலின்படி, கோவை சிறையில் தற்போது 2420 சிறைவாசிகள் உள்ளனர். அவர்களில் 1000 பேர் தண்டனை சிறைவாசிகள்; 150 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர். மற்றவர்கள் விசாரணைக் கைதிகள்…

டிங் லிரெனிடம் 12-வது சுற்றில் குகேஷ் தோல்வி – மீண்டும் சமநிலை | world chess championship gukesh loss to ding liren in round 12

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 12-வது சுற்றில், டிங் லிரெனிடம் குகேஷ் தோல்வி கண்டார். இதனால், போட்டி மீண்டும் 6-6 என சமநிலையை எட்டி உள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில்…

தேனி: `புரோட்டாவில் நெஞ்சு முடி; ஹோட்டலை மூடு'- வம்படியாக பஞ்சாயத்து; நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த தம்பதி சரவணன், பாக்கியலட்சுமி. இவர்கள் அல்லிநகரம் சிவசக்தி விநாயகர் கோயில் அருகே பாக்கியலட்சுமி என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இந்த ஹோட்டலுக்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நித்யானந்தம் என்பவர் புரோட்டாவில் முடி இருந்ததாகக் கூறி தகராறில் ஈடுபட்டிருக்கிறார். சரவணன் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் வேறு புரோட்டா தருவதாகக் கூறியிருக்கிறார். ஹோட்டல்அதையேற்க மறுத்த நித்யானந்தம் ஹோட்டலை காலி செய்துவிடுவதாகவும், கொலைமிரட்டல் விடுத்தும் சென்றிருக்கிறார். இதில்…