ரூ.799க்கு 400 வகை உணவுகள்; சொதப்பிய கொங்கு உணவுத் திருவிழா.. கொந்தளித்த கோவை மக்கள்.. நடந்தது என்ன?
கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் இரண்டு நாட்கள் (நேற்று, இன்று) ஆகிய இரண்டு நாள்கள் கொங்கு உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. சைவம் மற்றும் அசைவத்தில் ஏராளமான உணவுகள் அதில் இடம்பெற்றுள்ளன.கோவை கொங்கு உணவுத் திருவிழாஇதில் பல்வேறு கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதற்காக சமூகவலைத்தளங்களில் சின்னத்திரை நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் கொடுத்தனர். இதனால் மக்களிடம் பெரியளவு எதிர்பார்ப்பு இருந்தது.100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. சைவ, அசைவ உணவுகளுடன் துரித உணவுகள், பழச்சாறுகளும் வைக்கப்பட்டிருந்தன. உணவுத் திருவிழாவில்…