நீலகிரி: தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; காரணத்தைக் கண்டறிய களமிறங்கிய வனத்துறை!
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மலையில் வளர்ச்சி என்ற பெயரில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பணிகளால் இயற்கை சமநிலையில் அளவுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கும் சிறுத்தை இறப்பு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன. தோட்ட பகுதிகளில் தஞ்சமடையும் வனவிலங்குகள் மர்மமாக இறக்கும் போக்கு நீலகிரியில் அதிகரித்து வருகிறது. அண்மையில் கோத்தகிரியில்…








