இந்தியா பாகிஸ்தான்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானில் விளையாட மறுத்ததா இந்திய அணி?
பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை பி.சி.சி.ஐ அனுப்ப மறுத்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) முதல் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ தெரிவித்ததாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐ.சி.சி தெரிவித்துள்ளது என பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகின்றன.…