தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் எதிர்பார்த்தது என்ன, அவர் வழங்கியது என்ன?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்திய நீதித்துறையின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைமை நீதிபதிகளில் ஒருவரான தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் (டி.ஒய். சந்திரசூட்) நவம்பர் 10-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்காலம் பல காரணங்களால் விமர்சனத்துக்குள்ளானது.அவரால் நீதிமன்றம் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க முடியும், அவர் பெரும்பான்மை பலம் கொண்ட ஓர் அரசாங்கத்தை எதிர்ப்பார், சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வார், எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அவரை நம்பியவர்கள் ஏராளம்.எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலோ…









