IND vs NZ புனே டெஸ்ட்: மிட்செல் சான்ட்னர் சுழலில் சரிந்த வீரர்கள் – 156 ரன்களில் சுருண்ட இந்தியா!
புனே: வீரர்கள் நிலைக்காமல் அவுட்டாகி வெளியேறியதன் விளையாக நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற நிலையில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில்…