Monthly Archives: October, 2024

இந்திய அணிக்கு 2-வது படுதோல்வி: தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து! | New Zealand won by 113 runs against india in test match

புனே: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி அடையுமா அல்லது ஒயிட்வாஷ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவில் சுற்றுப்ப யணம் செய்து நியூஸிலாந்து கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா…

`பெண்கள் வலிமையற்றவர்கள் அல்ல…’ – இரு விரல்களில் மினி பஸ்ஸை இழுத்து சாதனை படைத்த யோகா ஆசிரியர் | woman yoga teacher pulls mini bus using two fingers in tiruvannamalai

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு, ஐந்து டன் எடையுள்ள பேருந்தை இரு விரல்களால் 250 மீட்டர் இழுத்துச் சென்று, யோகா ஆசிரியர் ஒருவர் சாதனை படைத்திருக்கிறார்.திருவண்ணாமலையில் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுற்றுப்புற சுகாதார பாதுகாப்பை வலியுறுத்தி யோகா மற்றும் சிலம்பம் பயிற்சியாளரான கல்பனா, ஐந்து டன் எடை கொண்ட மினி பஸ்சை 250 மீட்டர் இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளார். அங்கிருந்த…

ஃபுல்டாஸில் போல்டு ஆகிறாரே… – விராட் கோலி குறித்து மஞ்சுரேக்கர் கவலை | Manjurekar is worried about Virat Kohli 

ஒரு காலத்தில் நம்பர் 1 பேட்டராகத் திகழ்ந்த விராட் கோலி கடைசியில் ஒரு தாழ்வான ஃபுல்டாசைக் கூட சரியாகக் கணிக்க முடியாமல் ஸ்கூல் கிரிக்கெட்டர் போல் போல்டு ஆகி வெளியேறியது கவலையளிப்பதாக இருப்பதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியதாவது: “புனே டெஸ்ட் போட்டியில் கோலி ஆடிய ஷாட் தேர்வை விடவும் மோசமானது அவரது பந்து பற்றிய கணிப்பு. இதுதான் எனக்குக் கவலையளிக்கிறது. பந்தின் லெந்த்தைக் கணிப்பது விராட் கோலிக்குப் பிரச்சனையாக இருந்து…

நைஜீரியா: வெள்ளத்தால் அழிந்த விவசாயம், உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம்

காணொளிக் குறிப்பு, நைஜீரியாவில் இந்த ஆண்டு 22 மில்லியன் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதுநைஜீரியா: வெள்ளத்தால் அழிந்த விவசாயம், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்57 நிமிடங்களுக்கு முன்னர்இந்த ஆண்டு நைஜீரியாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால், அரை மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் அழிந்துவிட்டன.அங்கு இந்த ஆண்டு 22 மில்லியன் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.“காலநிலை மாற்றம் விவசாயிகளுக்குப் பெரும் பொருளியல் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே புதிய வழிகள், நீர் மேலாண்மை…

‘கட்டுப்படுத்தும்’ வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் – 5 வி. இழந்த நியூஸி. 301 ரன்கள் முன்னிலை @ புனே டெஸ்ட் | New Zealand scored 198 runs against india in 2nd test

புனே: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடியவில் 5 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி 198 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 301 ரன்கள் நியூஸிலாந்து முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற நிலையில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில்…

Junior Vikatan – 30 October 2024 – “கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால், தி.மு.க கீழே விழுந்துவிடும்” என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்? | discussion about edappadi palanisamy comments about dmk alliance

ஜெ.ஜெயவர்தன்ஜெ.ஜெயவர்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அ.தி.மு.க“உண்மையைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. கட்சி தொடங்கிய காலம் தொட்டு, சொந்தக்காலில் நிற்காமல் கூட்டணிக் கட்சிகளை நம்பி மட்டுமே தேர்தலைச் சந்திக்கும் ஒரு கட்சி இருக்கிறதென்றால், அது தி.மு.க-தான். 2011, 2016 என்று தொடர்ந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல் களில் படுதோல்வியடைந்த தி.மு.க., அடுத்து வந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4.4 சதவிகித வாக்கு வித்தியாசத்திலேயே அ.தி.மு.க-வை முந்தியது. இன்னும் சொல்லப்போனால் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளால்தான் தி.மு.க ஆட்சிக்கே வந்தது.…

மிட்செல் சாண்ட்னரின் சுழலில் சிக்கிய இந்திய அணி; 301 ரன்களுடன் நியூஸிலாந்து முன்னிலை | புனே டெஸ்ட் ஹைலைட்ஸ் | IND vs NZ pune test highlights

புனே: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 45.3 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கி 79.1 ஓவரில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டேவன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் நாள்…

IND Vs NZ: சிஎஸ்கே வீரர் சான்ட்னர் சுழலில் இந்தியா வீழ்ந்தது எப்படி? – விறுவிறுப்பான கட்டத்தில் புனே டெஸ்ட்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனேயில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் சுருண்டது.நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களில் ஆட்டமிழந்து. தற்போது, 2வது இன்னிங்ஸில் பேட் செய்துவரும் நியூசிலாந்து அணி இன்றைய (அக்டோபர் 25) ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து, 301 ரன்கள்…

Ind Vs Nz : `டேய் யார்றா அந்தப் பையன்' – சுழலில் சாய்த்த சான்ட்னர்; முன்னிலையில் நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கே அதிர்ச்சிகரமாக ஆல் அவுட் ஆகியிருக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸின் முடிவில் 103 ரன்கள் முன்னிலைப் பெற்றிருக்கிறது.Nzநியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களை எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி நன்றாக ஆடிக்கொண்டிருந்த சூழலில் இந்தியா சார்பில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறப்பாக வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால்…

திருவாரூர்: “பஸ் ஸ்டாப் இருந்தும் பஸ் நிற்காது…” – அரசுக் கல்லூரி மாணவர்கள் வேதனை | government college students are in agony for bus goes without stopping

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, தண்டலைச்சேரி பகுதியில், திருத்துறைப்பூண்டி – திருவாரூர் பிரதான சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி தொடக்கத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியாக இருந்து, 2020-ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்தக் கல்லூரி தொடங்கப்பட்ட 2011-ல் கல்லூரிக்கு அருகில் பேருந்து நிறுத்தம் இல்லமல் இருந்தது. அதனால், கல்லூரிக்கு ஒரு கிலோமீட்டர் தள்ளியே மாணவர்கள் இறங்கும் சூழல் இருந்தது. Source link

1 4 5 6 7 8 31