`மு.க.ஸ்டாலின் சொந்தக் காசில் சூனியம் வைத்துள்ளார்' – கடம்பூர் ராஜூ விமர்சனம்
“செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியும், உதயநிதியை துணை முதலமைச்சராக்கியும் சொந்தக் காசில் சூனியம் வைத்துள்ளார் ஸ்டாலின்” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.பேரையூர் கூட்டத்தில்மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரையூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “இந்த திருமங்கலம் தொகுதி பல அமைச்சர்களை உருவாக்கிய தொகுதியாகும்.1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் பதவியேற்றபோது, இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பி.டி சரஸ்வதியை அமைச்சராக்கினார். அதனைத் தொடர்ந்து…