Rain Alert: அடுத்த 5 நாள்களுக்கு அதிக கனமழை; பருவ மழையும் அதிகம் இருக்கும்; வானிலை மையம் சொல்வதென்ன?
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் 5ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வட தமிழகத்தில் இயல்பைவிட அதிக கனமழையும், தென் தமிழகத்தில் இயல்பான மழைப்பொழிவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…