இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்: பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் சாதனை! | Sumit Antil Gets India Third Gold With Games Record Throw
பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர். இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன.…