கடைசி உலகப் போர் விமர்சனம்: போர், உலக அரசியல் – ஹிப்ஹாப் ஆதியின் பிரமாண்ட முயற்சி கவனம் பெறுகிறதா? | Kadaisi Ulaga Por Review: Ambitious, audacious but could have been deeper
தன் மீது உருவாகியுள்ள டெம்ளேட்டுகளை உடைத்து, உலக அரசியல், இந்திய அரசியல் என வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர், நடிகர் ஹிப்ஹாப் ஆதி. கதைக்கான மையத்தை நெருங்கும் முதல் பாதியின் காட்சிகளிலிருக்கும் வேகம் சிறிது குழப்பத்தை உண்டாக்கினாலும் நம் கவனத்தைச் சிதறவிடாமல் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக நட்டியின் நக்கலான பேச்சும், பிரச்னைகளை அணுகும் விதமும் ரசிக்க வைக்கின்றன. ஒரு போரினைக் காட்டவேண்டும், அதற்குப் பின்னான உலகினைக் காட்டவேண்டும் என்கிற பிரமாண்ட டாஸ்கினைக் குறைவான பட்ஜெட்டில் சிறப்பாகச் செயல்படுத்தி…