Arvind Kejriwal: `பாஜக-வின் சிறைச் சுவர்கள் என்னைப் பலவீனப்படுத்தாது!' – கொட்டும் மழையில் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவால் திகார் சிறையிலிருந்து தற்போது வெளிவந்திருக்கிறார்.முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அதிரடியாகக் கைதுசெய்து சிறையிலடைத்தது. பின்னர், மே மாதத்தில் டெல்லியில் தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீனில் விடுவித்தது.அரவிந்த் கெஜ்ரிவால்பிறகு, தேர்தல் முடிந்ததும் சிறையில் சரணடைந்த கெஜ்ரிவால், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து,…