“எனக்கு பொண்ணுங்க மேல ஈர்ப்பே வரலை'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 134
காதல், எதிர்பாலினம் மீது வருவதுபோலவே தன்பாலினம் மீதும் வரும் என்பதை சமூகம் சமீபத்தில்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், குடும்ப அமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா என்றால், அது கேள்விக்குறிதான்… இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றைதான் இந்தக் கட்டுரையில் பகிரவிருக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அந்த இளைஞர் இருபதுகளின் இறுதியில் இருந்தார். பார்ப்பதற்கு எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு அழகான தோற்றத்துடன் இருந்தார். வசதி படைத்தவர் என்பதும் சொல்லாமலே தெரிந்தது. தனக்கு திருமணம் செய்து வைப்பதற்கு, தன்னுடைய பெற்றோர் பெண் தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.…