Daily Archives: January 12, 2024

Doctor Vikatan: வேளை தவறி மருந்துகள் எடுத்தால் அவை வேலை செய்யாதா? |Will the medicines not work if taken at the wrong time?

சில மருந்துகளை வெறும்வயிற்றில் எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் அவை வயிறு மற்றும் குடல் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதன்படி பார்த்தால் வலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரை போன்றவற்றை சாப்பாட்டுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளவே அறிவுறுத்துவோம்.ஆன்டிபயாடிக், வயிற்றுப்புண்களைத் தடுக்கும் மருந்துகள் சிலவற்றை சாப்பாட்டுக்கு முன் எடுத்துக்கொள்ளச் சொல்வோம்.  எப்போதாவது ஒருமுறை சாப்பாட்டுக்கு முன் எடுக்க வேண்டிய மருந்தை மறந்துவிட்டு, சாப்பாட்டுக்குப் பின் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. சாப்பாடு சாப்பிட்டுவிட்டோமே என்ற எண்ணத்தில் மருந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பதுதான் தவறு. ஆனால் இதையே வழக்கமாக வைத்துக்கொள்ளாமல்,எந்தெந்த மாத்திரைகளை எப்போது எடுக்க வேண்டும்…