Daily Archives: January 11, 2024

Doctor Vikatan: திடீரென குறைந்த உடல் எடை… சிறுதானிய உணவுப்பழக்கம்தான் காரணமா? | Can a millet based diet cause sudden weight loss?

அதுவே எடை குறையத் தேவையில்லை என்போர், உணவு இடைவேளைகளில் பழங்கள், ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள், நட்ஸ், சீட்ஸ்  போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால் இதைத் தொடர்ச்சியாகப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க வேண்டும். என்றோ ஒருநாள் கல்யாணம், விருந்து, விசேஷங்களில் அதிகம் சாப்பிடுவதில் தவறில்லை. அதை அடிக்கடி பழக்கப்படுத்திக் கொள்ளாமல், பேலன்ஸ்டு உணவாகச் சாப்பிட வேண்டும். பாரம்பர்ய அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளை உண்பதால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். எலும்புகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் சுறுசுறுப்பாக, ஆக்டிவ்வாக இருக்கும்.…

Doctor Vikatan: 20 வயது மகனுக்கு வாரந்தோறும் ஜலதோஷம்… நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன வழி?

Doctor Vikatan: என் மகனுக்கு 20 வயதாகிறது. வாரம் ஒருமுறை அவனுக்கு சளி பிடித்துக்கொள்கிறது. நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருப்பது புரிகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு…. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி டாக்டர் குமாரசாமிகொரோனா காலத்துக்குப் பிறகுதான் மக்கள் நோய் எதிர்ப்பாற்றல் என்ற விஷயம் குறித்துப் பேசவும், அது குறித்து கவலைப்படவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.உங்கள் மகனுக்கு ஏற்படும் இந்தப் பிரச்னையின் பின்னணியில் நோய் எதிர்ப்பாற்றல் திறன் குறைபாடு தொடர்பான பாதிப்புகள்…

போக்சோ விசாரணை: “நாய் கூண்டு போல விட்னஸ் பாக்ஸ் உள்ளது…” கேரள உயர் நீதிமன்றம்! | witness box for POCSO case victims worse than kennels

போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களை ஜனவரி 8 திங்கள்கிழமையன்று பரிசீலித்த நீதிபதி சோபி தாமஸ், விட்னஸ் பாக்ஸ் குறித்த தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அவர் கூறுகையில், “போக்ஸோ நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் சாட்சி சொல்ல இடம் உள்ளது. குழந்தைகள் சாட்சி சொல்ல இருக்க வைக்கப்படுகிற இடம் வெளிச்சம்கூட புகாத அளவுக்கு இறுக்கமாக நாய்க்கூண்டைப் ( dog kennels) போல் உள்ளது.  நாய்க்கூண்டிலாவது வெளிச்சம் உள்ளே வரக்கூடிய அளவுக்குக் கம்பிகள் உள்ளன. இங்கு குழந்தைகள் மூடிய இடத்துக்குள் இருக்க…