“கொஞ்சம்கூட ஃபீலிங்கே இல்லாம இருக்கா…” – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -132 | Sexual guidance for newly married couple
தாம்பத்திய உறவில் ஒரு விஷயத்தை கணவர் விரும்பி, அதே விஷயத்தை மனைவி விரும்பவில்லை என்றால், அவர்கள் உறவில் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்யும். அதுபோன்ற ஒரு கேஸ் ஹிஸ்டரியை பற்றி இன்றைய கட்டுரையில் விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். “‘அந்த தம்பதியர் என்னை சந்திக்க வருகையில் மிகுந்த சோர்வாக இருந்தார்கள். அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு புதிதாக திருமணமானவர்கள் என்பதைச் சொல்லியது. யார் முதலில் பேசுவது என்கிற யோசனையுடன் அமர்ந்திருந்தவர்களிடம், ‘என்ன பிரச்னை’ என்று…