“திடீரென அழ ஆரம்பித்தேன்… பிரசவத்துக்குப் பின் மனஅழுத்தத்தை எதிர்கொள்கிறேன்” – இலியானா | Ileana open up that she is still going through postpartum depression
இப்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இலியானா, மகப்பேறுக்குப் பிறகான மனஅழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தச் சமயத்தில் அவரின் பார்ட்னர் ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.“பெரும்பாலான அம்மாக்களின் குற்றஉணர்ச்சி முற்றிலும் உண்மையானது.. ஒருநாள் நான் என்னுடைய அறையில் இருந்தேன். திடீரென நான் அழ ஆரம்பித்துவிட்டேன். என்னவாயிற்று என பார்ட்னர் என்னிடம் கேட்க, `இது முட்டாள்தனமாக இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் மகன் வேறோர் அறையில் உறங்கிக் கொண்டு இருக்கிறான். அவனை மிஸ் செய்கிறேன்’ என்றேன். குழந்தை பெற்ற பிறகு இதுபோன்ற தீவிரமான எமோஷனை…