அதிகமா சுயஇன்பம் செஞ்சா விந்துவோட ரத்தம் வருமா..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -131 – Medical facts on bleeding during masturbation…
சுய இன்பம் செய்யும்போது திடீரென ரத்தம் வந்தால் சம்பந்தப்பட்ட ஆண் எப்படி பதறிப்போவார்..? இப்படியொரு கேஸ் ஹிஸ்டரியையும், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். “ஒருத்தர் ரொம்ப ரொம்ப பதற்றமா ரிசப்ஷன்ல உட்கார்ந்திருக்கார் டாக்டர். உங்களை உடனே பார்க்கணுமாம். எமர்ஜென்சி என்று அவசரப்படுத்துகிறார்” என்றார்கள், என் மருத்துவமனையின் ரிசப்ஷனிஸ்ட்டுகள். எமர்ஜென்சி என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் `சரி உடனே உள்ள அனுப்புங்க’ என்றேன். கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தார். தண்ணீர் அருந்த வைத்து சமாதானப்படுத்தினேன். அவருடைய பிரச்னையைச் சொன்னார்.…