Daily Archives: January 2, 2024

சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சைக்குப் பின் கை, கால்களை இழந்த பெண்… என்ன நடந்தது?I Woman Loses Arms And Legs After Kidney Stone Surgery

தனது வாழ்வின் தொடர் பிரச்னைகள் குறித்து பேசியுள்ள முலின்ஸ், “நான் என் இரு கால்களை இழந்துவிட்டேன். என்னுடைய கைகளையும் இழக்கப் போகிறேன்; “உயிரை காக்க நாங்கள் செய்ய வேண்டியது இதுதான்’ என மருத்துவர்கள் கூறினர்.நான் உயிருடன் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பார்க்கிறேன். கணவரோடு நேரத்தைச் செலவிடுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.லுசிண்டா முலின்ஸை அவரின் நண்பர்கள் ‘சிண்டி’ என செல்லமாக அழைக்கின்றனர். இவருக்காகவும் அவரின் கணவர் டிஜே மற்றும் குழந்தைகளுக்காகவும் `GoFundMe’ பக்கத்தில் அவர்கள்…

தலைக்குக் குளிக்கும் நாள்களில் சாம்பிராணி புகை போடுவது சரியானதா?| Is it right to use incense smoke after having oil bath?

ஊதுவத்தி, சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருள்களும், புகையைக் கிளப்புகிற வஸ்துகளும் வாயுப் பொருள்கள், கரிமச் சேர்மங்களை உள்ளடக்கியவையாக இருக்கும். அவை வெளியிடும் மாசு மற்றும் புகையானது  சுவாசப்பாதை பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவை வெளியிடும் மாசை உள்ளிழுக்கும்போது சுவாசப்பாதை செயலிழப்புகூட ஏற்படலாம். ஊதுவத்தியின் புகையானது ரத்தத்தில் IgE  அளவுகளை அதிகரித்து, அதன் விளைவாக சரும அலர்ஜிகூட ஏற்படலாம். மற்றபடி இதுபோன்ற அலர்ஜி அல்லது சுவாசப்பாதை பிரச்னைகள் இல்லாதவர்கள் சாம்பிராணி போட்டுக்கொள்ளலாம். அவர்களுமே சாம்பிராணி புகை போடும்போது வீட்டின் கதவுகள், ஜன்னல்களைத் திறந்துவைக்க வேண்டியது அவசியம். அதன் மூலம் காற்று மாசு நீர்த்துப்போய், புகை ஏற்படுத்தும்…

Doctor Vikatan: அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்டால் தலைவலி, எரிச்சல்… தீர்வு என்ன?

Doctor Vikatan: அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது எரிச்சலடைகிறேன். தொடர்ந்து அப்படிப்பட்ட சத்தத்தைக் கேட்கும்போது தலைவலிக்கிறது. காரணம் என்ன… இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் சிலருக்கு இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதாவது, அதிக அளவிலான சத்தத்தை நீண்ட காலமாகக் கேட்பதால் பலவித உடல்நலக் குறைபாடுகள் உண்டாகும் ஆபத்து உள்ளது. காது கேட்கும் திறன் குறைவது…