ஆரணி: காலை உணவில் விழுந்த பல்லி? – கவனக்குறைவாகச் செயல்பட்ட சமையலர்கள் – 13 மாணவர்களுக்குச் சிகிச்சை | food poisoned by a lizard – government school students affected
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கெங்காபுரம் கிராமம் சமத்துவபுரத்தில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 25 மாணவ – மாணவிகள் பயில்கிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் இந்தப் பள்ளியிலும் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. இன்று காலை வழக்கம்போல, ‘உப்புமா’ சமைத்து வழங்கப்பட்டது. அதைச் சாப்பிட்டுவிட்டு வகுப்பறையில் அமர்ந்திருந்த 13 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்கள் அனைவரையும் மீட்டு… அருகிலுள்ள பெரியக்கொழப்பலூர் அரசு ஆரம்பச் சுகாதார…