2024 PT5: பூமிக்கு வரும் இரண்டாம் நிலா – எத்தனை நாள் இருக்கும்? எப்படிப் பார்க்கலாம்?

Share

பூமிக்கு வரும் இரண்டாம் நிலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த புதிய நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால் வெறும் கண்களால் தெளிவாக பார்க்க முடியாது.

ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது.

இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி எதிர்வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி, இரண்டு மாதங்கள் வரை பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பித்துச் செல்லும்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டாம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்களால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலைநோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com