உயிர் பிழைக்க கெடு; வயிற்றுவலியைக் கண்டு கொள்ளாததால் பெண்ணுக்கு விபரீதம்; மனஅழுத்தம் காரணமா?
ஏதோ ஒரு வலி ஏற்படுகையில் அதை எளிமையாகக் கடந்து விடுவோம். தாங்கிக் கொள்ள முடியாத வலி ஏற்படும் பட்சத்திலேயே மருத்துவரின் உதவியை நாடுவோம். இப்படி பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட வலியைச் சாதாரணமாக கடந்து சென்றது, அவருடைய உயிருக்கே 24 மணிநேரம் கெடு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த 33 வயது பெண், விக்டோரியா டான்ஸன். இவருக்கு நீண்ட காலமாகவே தீராத வயிற்றுவலியும், சோர்வும் இருந்துள்ளது. இவர் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.stomach painஇரண்டு வேலைகளைப் பார்த்ததால், வாரத்தில் 60 மணிநேரம் வேலை செய்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தையும், மன அழுத்தத்தால் உண்டான…








