ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக ஈவிகேஎஸ். இளங்கோவன் பதவியேற்பு : 38 ஆண்டுக்கு பின் மீண்டும் சட்டசபைக்கு செல்கிறார்!!
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஜனவரி 18ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 1 லட்சத்து 70…









