பதவி பறிபோக காரணமான கோலாரில் ஏப்.5ல் ‘சத்தியமேவ ஜெயதே’ ராகுல் பிரசாரம் தொடக்கம்
கோலார்: எம்பி பதவி பறிபோக காரணமாக அமைந்த கோலாரில் மீண்டும் தனது பிரசாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்குகிறார். மக்களவைக்கு கடந்த 2019ம் ஆண்டு பொது தேர்தல் நடந்தபோது, கோலார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட கே.எச்.முனியப்பாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி பங்கேற்று வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தலைமறைவாகி இருக்கும் லலித்மோடி, நீரவ்மோடி ஆகியோரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம்…









