7.5% இடஒதுக்கீட்டால் 2021-ல் 7,886 பேரும் இவ்வாண்டு 6,771 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர்: அமைச்சர் பொன்முடி தகவல்
சென்னை: 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டால் 2021-ல் 7,886 பேரும் இவ்வாண்டு 6,771 மாணவர்களும் பயன்பெற்றுள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வரும் கல்வியாண்டில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மொழிப்பாடங்கள் விரிவாக்கப்படும். 68,891 மாணவர்கள் இவ்வாண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 1.28 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த நிலையில் இவ்வாண்டு 1.48 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார். Source link








