கர்நாடகா: பாஜக-வின் பரிசுகளைத் தூக்கியெறிந்த மக்கள்; தீயாகப் பரவும் வீடியோ – காங்கிரஸ் கண்டனம்! | Karnataka: People throw away BJP’s gifts; Video spreading like fire – Congress condemned!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வழக்கத்தைவிட இந்த முறை, செல்வ செழிப்பான வேட்பாளர்களை கட்சியினர் தேர்ந்தெடுத்த நிலையில், 1,087 கோடீஸ்வர வேட்பாளர்கள் களம்கண்டிருக்கின்றனர்.மாநிலம் முழுவதிலும் அரசியல் கட்சியினர் மாறி மாறி வாக்காளர்களுக்கு, சேலைகள், தங்க நாணயம், வெள்ளி விநாயகர் சிலை எனப் பலவற்றை பரிசுப்பொருள்களாக வழங்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படியான நிலையில், மாண்டியா மாவட்டத்தின் கிருஷ்ணராஜ பேட்டை (கே.ஆர்.பேட்) தொகுதியின், பா.ஜ.க வேட்பாளர் கே.சி.நாராயண கெளவுடாவின்…








