துணி ஹூக்கில் ஸ்பை கேமரா… “இது கவனத்தை ஈர்க்காது” – அமேசானின் விற்பனை விளம்பர வன்மம்…!| Controversy regarding Amazon sales on clothes hook spy camera
இது போன்ற கேமராக்கள் `Amazon.co.uk’ தளத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமேசான் பக்கத்தில், ஆடை ஹூக் கேமராவின் புகைப்படங்கள் குளியல் அறையிலும், படுக்கை அறையிலும் காட்டப்படுகின்றன. அலாரம் கடிகாரத்தில் மறைக்கப்பட்ட கேமராவின் புகைப்படங்கள், படுக்கையில் இருக்கும் தம்பதியினரின் போனில் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் இருக்கிறது.யு.எஸ்.பி சார்ஜரில் மறைக்கப்பட்ட கேமராவின் புகைப்படங்கள் ஒரு ஜோடி கட்டியணைத்தபடி இருக்கும் படத்தைக் காட்டும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஷவர் ரேடியோவில் மறைக்கப்பட்ட பாத்ரூம் ஸ்பை கேமராவில் இது சிஐஏ-விற்கு பயப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது…