வெற்றிலை லட்டு, வஞ்சிரம் மீன் புட்டு… வேலூரில் கமகமத்த அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’! | `Aval Vikatan samayal super star’ cooking competition in vellore
அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் 11 ஊர்களில் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார். மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, கும்பகோணம், சேலம், புதுச்சேரியைத் தொடர்ந்து… வேலூரில் நவம்பர் 24-ம் தேதி இப்போட்டி நடைபெற்றது. வேலூர், காட்பாடி மற்றும் அருகேயுள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை மற்றும் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து பதின் வயதினரில் தொடங்கி 70 வயது முதியோர் வரை,…