கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிரிக்க என்ன செய்ய வேண்டும்?|Health: Lower Bad Cholesterol; Increase Good Cholesterol
Doctor Vikatan: எனக்கு பல வருடங்களாக நீரிழிவு நோய் இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும், நல்ல கொலஸ்ட்ரால் அளவு குறைவாகவும் உள்ளது. நல்ல கொலஸ்ட்ரால் அளவை மருந்துகள் உதவியின்றி எப்படி அதிகரிப்பது?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்நல்ல கொலஸ்ட்ரால் என்பது ஹெச்டிஎல் (HDL) எனப்படும். ஆர்ட்டரீஸ் எனப்படும் தமனிகள் வழியேதான் நம் ஒட்டுமொத்த உடலுக்கும் ரத்தம் செல்கிறது. அந்த தமனிகளில் கொழுப்பு சேரக்கூடாது. எனவே ஹெச்டிஎல்தான் ரத்தக்குழாய் அடைப்புகளைத் தடுக்கக்கூடியது. …