“காண்டம் கிழிஞ்சு உள்ளேயே தங்கிடுச்சு டாக்டர்…'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -127
வெளிநாடுகளில், காண்டம் பயன்படுத்தியும் பிறந்த குழந்தைகளை தங்கள் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ‘இவன் என் காண்டம் கிழிஞ்சதாலே பொறந்தவன்’ என்று விளையாட்டாக கேலி செய்வார்களாம். அந்தளவுக்கு காண்டம் கிழிவது சாதாரண நிகழ்வாகத்தான் இருக்கிறது. காண்டம் கிழிந்து பெண்ணுறுப்புக்குள்ளேயே தங்கிவிட்டால் பிரச்னையாகுமா என்பதுபற்றி ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”காலை நேரம்…. முதல் பேஷன்ட்டாக அந்தத் தம்பதியர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். வெகு பதற்றமாக இருந்தார்கள். கணவர்தான் பேசினார். ‘டாக்டர், நேற்று செக்ஸ் வெச்சுக்கிட்டோம். எல்லாம் முடிந்து காண்டமை…