Daily Archives: December 19, 2023

சீனாவில் குழந்தைகளைக் குறிவைக்கும் சுவாசத் தொற்று… இந்தியாவையும் பாதிக்குமா..?

சீனாவில் கடந்த சில தினங்களாக குழந்தைகளிடம் தீவிர சுவாசப்பாதை தொற்று அதிகரித்துவருகிறது. இதையடுத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் பரிசோதனைகளை உறுதிசெய்யவும் மற்ற நாடுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. சீனாவின் பாதிப்பு மற்றும் அவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சீனாவில் அதிகரித்துவரும் இந்த பாதிப்புக்கு புதிய வைரஸ் காரணமில்லை என்றும், ஏற்கெனவே அறியப்பட்ட நோய்க்கிருமிகள்தான் காரணம் என்றும் சீனாவின் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் குழந்தைகளிடம் தீவிர சுவாசத் தொற்று பாதிப்புக்கான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ள…

“ஜெ.என்-1 கொரோனா… சிங்கப்பூருக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டோம், பீதி வேண்டாம்!” – கேரள அமைச்சர் | JN-1 Corona, we already found it, don’t panic – Minister of Kerala

கேரளா உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஜெ.என்-1 வகை கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. விழாக்காலங்களில் மக்கள் கூடும்போது எச்சரிக்கையாக இருக்கும்படியும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ’சிங்கப்பூர் கொரோனா’ என்று அழைக்கப்படும் ஜெ.என்-1 வகை கொரோனா கேரளாவில் அதிகமாகப் பரவி வருகிறது. கேரளாவில் நேற்றைய நிலவரப்படி 227 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 1,634 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரம் சிங்கப்பூரில் கண்டறியும் முன்பே கேரளாவில் ஜெ.என்-1 வகை கொரோனா…

Doctor Vikatan: உடல்நலமில்லாத குழந்தைக்கு தயிர் கொடுக்கலாமா? | Is it advisable to give curd when the child is unwell?

Doctor Vikatan: என் மகளுக்கு 10 வயதாகிறது. அவளுக்கு எல்லா உணவுகளிலும் தயிர் இருந்தால் மட்டுமே சாப்பிடுவாள். இட்லி, தோசை என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ள தயிர் கேட்பாள். உடல்நலம் சரியில்லாத போதும் தயிர்சாதம் கேட்டு அடம்பிடிப்பாள். தயிரை மோராக்கி, சூடு செய்து கொடுக்கலாம் என்கிறாள் என் தோழி. உடல்நலம் சரியில்லாதபோது தயிர், மோர் கொடுக்கலாமா? சூடு செய்து கொடுத்தால் பிரச்னை தராது என்பது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்உங்கள் மகளுக்கு எல்லா உணவுகளுடனும் தயிர்…