Daily Archives: December 18, 2023

உயிரைப் பறிக்குமா வேலைச்சுமை? மருத்துவர்களின் இறப்பும் நாராயணமூர்த்தியின் கருத்தும்!

சென்னையில் பணியாற்றிய அரசு மருத்துவர்களான டாக்டர் மருது பாண்டியன் மற்றும் டாக்டர் சோலைசாமி ஆகிய இருவரும் 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தது மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரது இறப்புக்கும் அதீத பணிச்சுமை காரணம், 24 மணி நேரம் தொடர் பணியில் இருந்தனர் என்று பலரும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவர் மருது பாண்டியன் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், `மருத்துவர் மருதுபாண்டியன் சென்னை மருத்துவக் கல்லூரியில்…

`அம்மாவுடன் நேரம் செலவிடுங்கள், அவர்களின் ஆயுள் அதிகரிக்கும்' – ஆய்வுத் தகவல்!

வயதாகும் போது பெரும்பாலான முதியவர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள். திணிக்கப்படும் தனிமை ஒரு கட்டத்தில் வாழ்வின் அங்கமாகவே மாறிவிடுகிறது. பேச ஆளில்லாமல், சிலர் தமக்குத் தாமே பேசிக் கொள்வதையும் கவனித்து இருக்கலாம்.இந்தநிலையில் `அம்மா மற்றும் பாட்டியை வெளியில் அழைத்துச் செல்வது, அவர்களின் ஆயுசு நாள்களை அதிகரிக்கும்’ என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. கலிஃபோர்னியா, சான் ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சராசரியாக 71 வயதுடைய 1,600 பெரியவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். சமூக பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனிமையில் இருப்பவர்கள் அதிக…

கத்திரிக்காய் பாயசம் முதல் பஞ்சாமிர்த பாஸ்தா வரை – வடசென்னையில் களைகட்டிய சமையல் சூப்பர் ஸ்டார்! | Aval Vikatan Samayal super star competition held in North Chennai

உளுந்தங்களி உருண்டை, ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு, பிரண்டைப் பணியாரம், பிரண்டை சாதம், வெந்தயக்கீரை சட்னி, புராணி ரைத்தா, டேட்ஸ் சாஸ், சிக்கன் லசானியா, ஆப்பிள் பீட்சா, மெக்சிகன் ரைஸ், தாய் கறி வரை என உள்ளூர் முதல் வெளியூர் வரை அனைத்து வகை உணவுகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர். சென்னையில் நடைபெற்ற அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிஇவை மட்டுமன்றி, தஞ்சாவூர் பாரம்பர்யமான சீராளங்கறி, பத்திய குழம்பு, இஞ்சித் தொக்கு, காயல்பட்டினம் வட்லாப்பம், திருவாதிரை களி, நவஅரிசிக் கஞ்சி,…

Doctor Vikatan: சிங்கப்பூர், கேரளா, தமிழகத்தில் கொரோனா பரவல்… பழைய கதை திரும்புகிறதா?

Doctor Vikatan: 2019-20-ல் சிங்கப்பூரில்தான் முதலில் கொரோனா தொற்று ஆரம்பமானது. அடுத்து இந்தியாவில் கேரளாவில் அதிகரித்தது. மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது மீண்டும் சிங்கப்பூரிலும் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் புதியவகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்திகளில் பார்க்கிறோம். இது மீண்டும் அச்சுறுத்தலாக மாற வாய்ப்பு உண்டா… ஆரம்பத்திலேயே தற்காத்துக்கொள்ள வழிகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலிDoctor Vikatan: இரண்டு வயதுக் குழந்தையிடம் ஆட்டிசம் அறிகுறிகள்… பெற்றோர் செய்ய…

பெண்கள் கிளை சிறைவாசிகளுக்கு மனஅழுத்த கலை நிகழ்ச்சி; பாடல், விளையாட்டு என மகிழ்ச்சி! | Salem; Art Program for Women’s Branch Jail Inmates

சேலம் பெண்கள் தனிக்கிளைச்சிறையில் சிறைவாசிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் குளிர்கால மன அழுத்த மாதம் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருடத்தின் கடைசி மாதமான, குளிர்கால டிசம்பர் மாதத்தில் பொதுவாக பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அமரேஷ் புஜாரி மற்றும் கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சேலம் பெண்கள் தனிக்கிளைச் சிறையில் மன அழுத்தத்தைப் போக்கும்…