Doctor Vikatan: டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் நார்மல்… அதன் பிறகு ஹார்ட் அட்டாக் எப்படி வந்தது..? | Treadmill test result was normal; how the heart attack after that?
சில நேரங்களில் மூச்சுவிடுதலில் மாற்றம் ஏற்பட்டதையே உணராமல் இருப்பார்கள் சிலர். அது வயதுக்கேற்ப இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் டிரெட்மில் டெஸ்ட் செய்ய வேண்டி வரலாம். டிரெட்மில் டெஸ்ட் உடன், இசிஜி பரிசோதனையும் சேர்த்துச் செய்யும்போது இன்னும் துல்லியமாக பிரச்னைகளைத் தெரிந்துகொள்ள முடியும்.டிரெட்மில் டெஸ்ட்டில் நார்மல் என வந்துவிட்டதால், அந்த நபருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளே இல்லை என எடுத்துக்கொள்ள முடியாது. டிரெட்மில் டெஸ்ட் என்பது சில நேரங்களில் மட்டும்தான் அசாதாரணமாக காட்டும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஓரளவுக்கு மேல் அடைப்பு இருக்கும் பட்சத்தில் டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் அசாதாரணம் என்று ரிசல்ட்டில்…

