Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முறை க்ரீன் டீ குடிக்கலாம்?|How many times can we drink green tea per day?
இத்தனை நல்ல பலன்கள் இருந்தாலும் க்ரீன் டீயை அளவுக்கதிகமாகக் குடிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு 3 கப்புகளுக்கு மேல் குடிக்க வேண்டாம். அதையும் காலையில் தொடங்கி, மாலை 4 மணிக்குள் குடித்து முடித்துவிட வேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடித்தால் உடலில் நீர்வறட்சி ஏற்படும். பால் சேர்க்காத க்ரீன் டீதானே…. அதுவும் தண்ணீருக்கு இணையானதுதானே என நினைத்து தண்ணீருக்கு பதில் க்ரீன் டீயை குடிக்க வேண்டாம். தினமும் காலையில் எழுந்ததும், பிறகு முற்பகலில், அடுத்து மாலை 4 மணிக்குள் குடிப்பது சிறந்தது.சிறுநீரகத்தில் பிரச்னை இருந்தால் க்ரீன் டீ குடிக்கலாமா?சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள்…





