குழந்தைகளை கூடுதலாக தோசை சாப்பிட வைக்க இந்த டிஷ் ட்ரை பண்ணி பாருங்க..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தோசை என்பது பிடிக்கும். அதுவும் நெய் ஊற்றி கொஞ்சம் மிதமான தீயில் வைத்து மொறுமொறுப்பாக மாறும் வரை பொறுத்திருந்து அதை உடைத்து சாப்பிடும்போது இருக்கும் சுகமே சுகம். அந்த தோசைக்கு எவ்வளவு பொன் கொடுத்தாலும் ஈடாகாது.அதிலும் கூடுதலாக தோசைக்கு நடுவில் காரசாரமான மசாலா எதாவது போட்டு அதை அப்படியே சட்டுவத்தை(தோசை திருப்பியை) வைத்து தோசையில் உள்ள மூலை வரை மசாலாவை பரப்பி சூடாக இருக்கும்போது அதை சுருட்டி கொடுத்தால் பசி…




