தாய்மையே அழகு!
‘தாய்ப்பால்’ மனிதர் உணரும் முதல் பசியின் உணவு. முதல் ருசியும் அதுதான். குழந்தை முதன்முதலில் தனக்கான ஒரு உறவைத் தேடி, உறுதி செய்வது தாய்ப்பாலை அருந்தும் போதுதான். பாதுகாப்பான உணர்வு, அரவணைப்பு, அன்பு, கருணை போன்ற பண்புகளையும், தாயின் கதகதப்பிலிருந்து குழந்தை உணரத் தொடங்கும். இயற்கையின் படைப்பாகச் சுரக்கும் தாய்ப்பாலில் சத்துக்களோடு, அன்பும் கலந்து ஊட்டப்படுகிறது. முதன்முறையாக ஒரு தாய் தன்னை முழுமையாக உணரும் தருணம், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தை பசியாறும் நிமிடம்தான். குழந்தை…





