Daily Archives: August 3, 2023

“தாய்ப்பாலூட்டலை அதிகரிக்க அரசு இவற்றையெல்லாம் எப்போது செய்யும்?!’’ | #BreastFeedingWeek

பணி இடங்களில் தாய்ப்பால் ஊட்டுவதற்கென்று தனி நேரம், குழந்தைகள் காப்பகம் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை அரசு செயல்படுத்தினால், தாய்ப்பால் புகட்டல் விகிதம் அதிகரிக்கும் என்கிறார் தாய்ப்பால் ஆலோசகர் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன். பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் புகட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தாய்ப்பால் ஆலோசகர்…

அடிக்கடி ஸ்வீட் சாப்பிடுவீங்களா? சருமம் கடுமையா பாதிக்கப்படலாம்- எச்சரிக்கும் நிபுணர்கள்!

சர்க்கரையில் தயாரான இனிப்புகளை அடிக்கடி விரும்பிச் சாப்பிடுபவரா நீங்கள்? இனி அடுத்தமுறை ஸ்வீட் சாப்பிட சற்று யோசிப்பது நல்லது. ஏனென்றால், சர்க்கரையால் தயாரிக்கப்படும் இனிப்புகளை அதிகம் உட்கொள்வது உங்கள் சருமத்தை பாதிக்கும் என்று சருமநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரைHow to: குளிர்காலத்தில் சருமத்தை பராமரிப்பது எப்படி? |How To Take Care Of Skin In Winter?இனிப்பு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. நல்ல தகவல்களைப் பரிமாற, மகிழ்ச்சியை வெளிப்படுத்த இனிப்பை வழங்கித்தான் கொண்டாடுகிறோம். நமது உடலுக்கு…

பிரஷர் குக்கரில் ஒருபோதும் இந்த உணவுகளை சமைத்துவிடாதீர்கள்..!

பிரஷர் குக்கரில் ஒருபோதும் செய்யக்கூடாத சில உணவுகளும் உள்ளன. அவை என்னென்ன, ஏன் என்று தெரிந்துகொள்வோம். நன்றி

Doctor Vikatan: Children who puberty at an early age… Is there a treatment to delay it?

இந்த பாதிப்பில் `சென்ட்ரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி (central precocious puberty) மற்றும் `பெரிஃபெரல் ப்ரிகாஷியஸ் பியூபர்ட்டி’ (peripheral precocious puberty) என இருவகை உண்டு. நம் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியில் ஜிஎன்ஆர்ஹெச் Gonadotropin hormone-releasing hormone (GnRH) என்ற ஹார்மோன் சுரக்கும்.இது மூளையின் பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் ஹார்மோன்களைத் தூண்டும். எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் ஹார்மோன்கள் இரண்டும் சினைப்பையைத் தூண்டுவதால் அதிலுள்ள புரொஜெஸ்ட்ரான் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் விடுவிக்கப்படுகின்றன. இதற்குப் பிறகுதான் முதல்…

சிசேரியனைத் தவிர்க்க… கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய 7 வழிமுறைகள்! | Seven Tips for Normal delivery

* யோகாவைப் பொறுத்தவரையில் தோள்பட்டை, முதுகுத் தண்டுவடம், மார்புப் பகுதிகளுக்கான பயிற்சிகளை முறையான நிபுணரின் ஆலோசனையுடன் பெற்று செய்யலாம். தினமும் எளிய நடன அசைவுகளை மேற்கொள்வது, தசைகளை எளிதாக்க உதவும்.* உணவுப் பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின், புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும். * காரமான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி உணவுகள், செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.* சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் இருப்பவர்கள்…

சேலம் தட்டு வடை செட்..! நம்ம திருச்சியில் எங்க கிடைக்கும்னு தெரியுமா?

திருச்சி மாவட்டம் துறையூரில் சேலம் தட்டுவடை செட் கடை ஒன்றை சுஜாதா- செல்வராஜ் தம்பதியினரிடம் கடந்த 15 வருடங்களாக நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் சுஜாதா கூறியதாவது, “திருச்சி மாவட்டம் துறையூரில் BSNL ஆஃபீஸ் அருகில் நானும் என்னுடைய கணவர் செல்வராஜ் இருவரும் 15 வருடங்களாக சேலம் தட்டுவடை செட் கடை நடத்தி வருகிறோம். என் சொந்த ஊர் சேலம் என்பதால் அங்கு விற்கப்படும் சேலம் தட்டுவடை செட் மீது அதீத பிரியம். எனவே அதை…

̀மருத்துவ காரணங்கள் vs மூடநம்பிக்கை சர்ச்சை' – உண்மையில் சிசேரியன்கள் எதற்காக?

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு போன்றதுதான். ஒவ்வொரு பெண்ணும் தனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றே விரும்புவாள். ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிலருக்கு சிசேரியன் செய்யப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனை உட்பட பெரும்பாலான மருத்துவமனைகளில் சிசேரியன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிசேரியன் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.பிரசவம்.அதில், “சிலர் நாள், நட்சத்திரம் பார்த்து விரும்பிய தேதியில் சிசேரியன் செய்துகொள்கிறார்கள். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும். சுகப்பிரசவத்தில்…