Daily Archives: July 12, 2023

மஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய… தவிர்க்க வேண்டிய… உணவு முறைகள் என்னென்ன?

அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் வளர்ந்து நிற்கிறோம். ஆனாலும், இன்றும்கூட ஒருவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால் அவருக்குக் கீழாநெல்லி வேரை அரைத்து, அதன் சாற்றைக் குடிக்கக் கொடுக்கும் பழக்கம் கிராமங்களில் இருக்கிறது. மஞ்சள் காமாலையைப் போக்க அருமருந்தாகக் கீழாநெல்லி வேர் கருதப்படுகிறது. அதை ஆயுர்வேத மருத்துவமும் பரிந்துரைக்கிறது. ஆனால், அதை மருத்துவரின் ஆலோசனையுடன்தான் சாப்பிட வேண்டும் என்றும் கூறுகிறது. இது ஒருபுறமிருக்க… அலோபதி மருத்துவமோ அதை முற்றிலும் தவறு என்று எச்சரிக்கிறது. மஞ்சள் காமாலை குறித்த சந்தேகங்கள் பலரிடமும் உண்டு.Doubt…

`காபி, டீ குடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை’… மார்க் ஸுக்கர்பர்க் பகிர்ந்த தகவல்; காரணம் என்ன?|Mark Zuckerberg says his caffeine intake is zero

டீ அல்லது காபி குடிக்காமல் சிலருக்கு நாளே ஓடாது. ஆனால், சமீபத்தில் மார்க் ஸுக்கர்பெர்க் தனக்கு காபி, டீ குடிக்கும் பழக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 39 வயதாகும் மார்க் ஸுக்கர்பெர்க்கை ஒரு டெக் ஜாம்பவான் என்றே கூற வேண்டும். இவர் `Threads App’ லான்ச் செய்யும் போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், `காலையில் எழுந்ததும் மனதைத் தெளிவாக்க, வேலையைத் தாண்டி மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் (Mixed Martial Arts) போன்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்துவேன். அதிக புரதம்,…

உருளைக்கிழங்கை வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான டிபன் செய்ய ரெசிபி…

இரவு உணவுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி , உப்மா போன்றவை தான் சாதாரணமாக செய்வோம். அரிசி மாவு தோசை கொஞ்சம் போர் அடித்தால், கோதுமை தோசை, ரவா தோசை முதலியவற்றை செய்வோம். அதைத்தாண்டி என்ன செய்வது என்று யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டு இருப்போம்.இதே பிரச்சனை தான் காலையிலும் இருக்கும். ஆனால்  காலை , இரவு டிபன், மாலை ஸ்னாக்ஸ் என்று எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும் ஒரு உரிமையாக செய்யக்கூடிய உணவு பற்றி தான் உங்களுக்கு சொல்ல…

பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தச் சர்க்கரை குறைவு… கண்டறிவது எப்படி? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு-29

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். மருத்துவர் மு. ஜெயராஜ்பச்சிளங்குழந்தைகளை பாதிக்கும்…

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

வரும்முன் காப்பதன் முக்கியத்துவம்பற்றி சொல்லாத மருத்துவ முறைகள் இல்லை. ஆனால், நோய்கள் நம்மை நெருங்கிவிடாதபடி வாழ்வது அவ்வளவு சுலபமானதா? ”சாத்தியம்தான்” என்கிறார் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் உதவி விரிவுரையாளரும் சித்த மருத்துவருமான எஸ்.சுஜாதா ஜோசப். ‘உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ குறிப்பிட்ட நோய் ஏன் வருகிறது? அதை எப்படித் தடுப்பது என்பதை அறிந்தால் திருமூலரின் உபாயம் நமக்கும் தெரியவரும். உணவே மருந்து என்ற அடிப்படையில் நல்ல பல சிகிச்சை முறைகளையும் தீர்வுகளையும் இந்தத்…

தக்காளி இல்லாமல் ருசியான ரசம் வைக்க தெரியுமா..? ரெசிபி இதோ…

தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பலரும் தக்காளி இல்லாமல் சமையல் செய்வது எப்படி என்றுதான் யோசித்து வருகின்றனர். அந்த வகையில் அனைவரின் வீட்டிலும் எப்போதும் கட்டாயம் இருக்கும் ரசமும் தக்காளி இல்லாமல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :புளி – சிறிதளவுஎண்ணெய்கடுகுமஞ்சள் – சிறிதளவுபெருங்காயத்தூள் – 1 சிட்டிகைகொத்தமல்லி தழை – சிறிதளவுகருவேப்பிலை – சிறிதளவுகாய்ந்த மிளகாய் – 2உப்பு – தே.அஅரைக்கமிளகு – 2 tbspசீரகம் – 1 tbspவெந்தயம் -…

Doctor Vikatan – 01 November 2015 – மஞ்சள் காமாலை | Signs and symptoms of Jaundice – Doctor Vikatan

அறிகுறிகள்மஞ்சள் காமாலை முதலில் கண்ணில்தான் வெளிப்படுகிறது. கண்களில் மிகவும் மெல்லிய வெள்ளை நிறப் பகுதி ஸ்க்லீரா. பிளிருபின் அதிகமாக இருந்தால் ஸ்க்லீரா பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்துக்கு மாறும்.கண்ணில் மஞ்சள் காமாலை வந்திருப்பதைக் கண்டறிய பாதிக்கப்பட்டவரை இயற்கை வெளிச்சத்தில் வைத்துப் பரிசோதிப்பதே சிறந்த முறை. செயற்கை விளக்கொளியில் கண்டறிவதில் தாமதம் ஏற்படும்.நாக்கு, மேல் அன்னம், உள் உதடு, கைகள் போன்றவற்றில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பித்தநீர் சரியாக வெளியேறாது. எனவே, பித்த உப்பு உடலில் தங்கிவிடும். பிளிருபின்,…