கேன்சர் சிகிச்சையில் தரப்பட்ட ஆன்டிபயாடிக்; முடி முளைத்து கருப்பாக மாறிய நாக்கு… என்ன நடந்தது?|Antibiotic drug reaction left Woman With ‘Black Hairy Tongue’
மருந்துகள் கொடுக்கப்படும் போது, சிலருக்கு ஒருவித ஒவ்வாமை அல்லது வேறுசில அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. இப்படி ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்ட பெண்ணின் நாக்கு கறுப்பாக மாறி, முடிகள் முளைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜப்பானில், மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண், 14 மாதங்களுக்கு முன் சிகிச்சை எடுத்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபியின் பாதக விளைவுகளைக் குறைக்க, முகப்பரு முதல் நிமோனியா வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மினோசைக்ளின் (minocycline) கொடுக்கப்பட்டுள்ளது.சரும புண்களைத் தடுக்க, தினமும் 100 மி.கி அளவு…








