Daily Archives: May 10, 2023

டெல்லி: 30 குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை; கொலை – குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் குமார். இவரின் தந்தை தினக்கூலியாக பணியாற்றிவந்திருக்கிறார். ரவீந்தர் குமாரின் தாயார் வீட்டு வேலை செய்துவந்திருக்கிறார். 6-ம் வகுப்பு வரை படித்த ரவீந்தர் குமார் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல தொடங்கியிருக்கிறார். இதற்கிடையில், பெடோபிலியா (paedophilia) எனும் சிறு குழந்தைகளின் மீது ஆசை கொள்ளும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சிறுவர்கள்இந்த நிலையில்தான், ரவீந்தர் குமார் சிறுவர்-சிறுமிகளைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யத் தொடங்கியிருக்கிறார். இது குறித்துப் பேசிய கூடுதல் ஆணையர் விக்ரம்ஜித் சிங், “ரவீந்தர் குமார் ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் தூரம் நடந்து அவனுக்கு விருப்பமான குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வந்திருக்கிறான். இந்த…

டிஸ்லெக்ஸியா பாதிப்பு; மனம் திறந்த திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர்… வைரலாகும் பதிவு!|Filmmaker Shekhar Kapur Reveals He Is “Completely Dyslexic

திரைப்படத் தயாரிப்பாளரான சேகர் கபூர் (Shekhar Kapur), தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தனக்கு டிஸ்லெக்ஸியா பாதிப்பு இருப்பது குறித்து வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்குப் பாடம் கற்பித்த, வாழ்வின் முக்கியமான பகுதிகளை அவர் பகிர்ந்திருக்கிறார்.வாழ்க்கைப் பாடம் என்று குறிப்பிடப்பட்ட அந்தப் பதிவில், “நான் முற்றிலும் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவன். அதிகமான கலைஞர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்கள் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். செயற்கை நுண்ணறிவுடன் (AI) நான் விஷுவல் கணிதத்தின் மீது ஈர்ப்பை வளர்த்துக் கொண்டேன். ஆனால், பள்ளியில் கணிதத்தின் மீது வெறுப்பை வளர்த்துக்…

IPL 2023: RCB vs MI | சூர்யாவின் ‘சிக்ஸர்ஸ் ஷோ’ – ஆர்சிபியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது மும்பை | IPL 2023: RCB vs MI | Mumbai Indians won by 6 wkts against Royal Challengers Bangalore

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 200 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் வழக்கம் போல் ஏமாற்ற துவக்கம் கொடுத்தாலும் மற்றொரு முனையில் இருந்த இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். பவர் பிளே ஓவர்களில் ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியிருப்பார் போல, 20 பந்துகளில் தலா 4…

மணிப்பூர் கலவரத்தின் தற்போதைய நிலவரம்: 7 கேள்விகள், 7 பதில்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஹீரோக்லியன் கிராமத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட தானியங்களிலிருந்து எழும் புகைக்கு அருகே நிற்கும் இந்திய ராணுவ வீரர்.7 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு ஏற்பட்ட கலவரம் மற்றும் இன மோதல்களால் குறைந்தபட்சம் 52 பேர் கொல்லப்பட்டனர். 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த…

மொபைல் பேட்டரி சார்ஜ் குறைந்தால் கவலையடையும் இந்தியர்கள்… ஆய்வில் சுவாரஸ்யம்! | Research find out people have low battery anxiety

ஆய்வு முடிவுகள்:* மொபைலை பயன்படுத்தும் 65 சதவிகிதத்தினர், பேட்டரி குறைந்தால் ஒருவித அசௌகர்யத்தை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். * 72 சதவிகிதத்தினர் பேட்டரியானது, 20  சதவிகிதம் அல்லது அதற்கும் கீழ் குறைந்தால் பயம் கொள்வதாகக் கூறியுள்ளனர். * ஸ்மார்ட்போன் ஆக்டிவிட்டிகளில் முதன்மையாக இருக்க, ஆய்வில் ஈடுபட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள், தங்களுடைய ஸ்மார்ட்போன்களை ஒருநாளைக்கு இரண்டு முறையாவது சார்ஜ் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.* பேட்டரி குறைந்து போவது குறித்தான கவலை, 31 – 40 வயதுடையவர்களில் அதிகம் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து…

ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து பெரண்டாஃப் பந்து வீச்சில்…

கோடைக்காலத்தில் வால்நட் இப்படி சாப்பிடுங்க… இத்தனை பிரச்சனைகளுக்கு பலன் தரும்..!

வால்நட்ஸ்களை சாப்பிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அவற்றை இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு காலை நேரத்தில் சாப்பிடுவது ஆகும். தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் ஊறவைத்த வால்நட்ஸ்களை சாப்பிடுவது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, உடலை குளிர்ச்சியாக பராமரிக்கவும் உதவுகிறது. நன்றி

’40% கமிஷன், மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்’ – கர்நாடகா ஒப்பந்ததாரர்கள் சங்கம் கடிதம்–காரணம் என்ன? | Karnataka Contractors’ Association renews attack on govt, asks people to vote with their conscience

தேசிய அளவில் எதிர்பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைத்தேர்தல் நாளை காலை நடக்கவிருக்கிறது. இப்படியான நிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பா.ஜ.க ஆட்சி அமைந்தது முதலே, ‘பா.ஜ.க அனைத்து பணிகளிலும், 40 சதவிகிதம் கமிஷன் பெற்று ஊழல் செய்கிறது’ என காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துவந்தன. இப்படியான நிலையில், ‘மாநிலத்தில் 40 சதவிகித ஊழல், மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்’ என வலியுறுத்தி, ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் கடிதம், அரசியல் களத்தில்…