நீண்டதூரம் பைக் ஓட்டும் ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தி பாதிக்கும் | மரியாதை – S3 E40 | These are the reasons for Male Infertility!
தினசரி வாழ்க்கையில் ஆண்கள் சாதாரணமாகச் செய்கிற சில விஷயங்கள், அவர்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து குழந்தையின்மை பிரச்னையை ஏற்படுத்தலாம் என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அதுகுறித்து விளக்கமாகப் பேசினார். “தொடர்ந்து பல வருடங்கள், நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டும் போதும் அல்லது பைக் ஓட்டும் போதும், சம்பந்தப்பட்ட ஆண்களுடைய விந்தணுக்கள் நேரிடையாக பாதிக்கப்படும். ஏனென்றால், சைக்கிள் அல்லது பைக் ஓட்டும்போது நம்முடைய மொத்த உடல் எடையும், உட்காரும் இடத்தின் நடுப்பகுதியில், அதாவது ஆணுறுப்பின் மீதே விழும். இதனால் அந்தப் பகுதியில் இருக்கிற நரம்புகளும், தமனிகளும் (pudendal nerve,…







