மேகங்களில் 29 வகை பாக்டீரியாக்கள்… மழையில் நனைந்தாலே ஆபத்தா? மருத்துவர் தரும் விளக்கம்!
மழையைப் பொழியக்கூடிய மேகங்களில், மருந்துக்கு கட்டுப்படாத 29 வகை பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், மழையில் நனைந்தாலே ஆபத்தா என்பதற்கு மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். ஃப்ரான்ஸ் மற்றும் கனடாவை சேர்ந்த விஞ்ஞானிகள், வானில் மிதக்கும் மேகங்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு முதல், 2021 வரை சேகரிக்கப்பட்ட மேகத்தின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் முடிவுகள் `சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. மழைஆய்வு முடிவில், மேகங்களில் மருந்துக்கு…









