IPL 2023: DC vs SRH | மீண்டும் சொதப்பிய டெல்லி பேட்டிங் யூனிட் – ஹைதராபாத் அணிக்கு 145 ரன்கள் இலக்கு
ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. 16ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஹைதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி 3-வது பந்திலேயே பிலிப் சால்ட் விக்கெட்டாகி…








