Daily Archives: April 17, 2023

கோடைகாலத்தில் ஏன் மது அருந்தக்கூடாது… டீ, காபியை விட தண்ணீர் சிறந்ததா? மருத்துவர் விளக்கம் | Why not drink alcohol in summer.. Doctor’s explanation

சமீபத்தில், சென்னை தேனாம்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்ற பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விழிப்புணர்வாகச் செயல்பட சில ஆலோசனைகளை வழங்கியதோடு, `கோடைக்காலத்தில் மது அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்’ என்றும் அறிவுறுத்தினார். கோடைக்காலத்தில் மது அருந்துவதால் அதிக பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரத்திடம் கேட்டோம். மருத்துவர் அருண்…

‘பில்டிங் ஸ்ட்ராங்கு… பேஸ்மென்ட் வீக்கு!’ – ஐபிஎல் 2023 சீசனில் சோடை போன 5 வீரர்கள் | 5 players who have not performed well in ongoing IPL 2023

ஐபிஎல் 2023 தொடரில் இதுவரை பெரிய தலைகள் எதுவும் பெரிய ஸ்கோர்களை எட்டவில்லை, முதல் சதத்தையே சன் ரைசர்ஸின் இங்கிலாந்து அதிரடி மன்னர் ஹாரி புரூக்தான் எடுத்தார். மற்றபடி ஊடகங்களாலும், ஐபிஎல் மீடியா பார்ட்னர்களாலும் ஊதிப் பெருக்கப்பட்ட, பெருக்கி ஊதப்பட்ட வீரர்கள் பலர் சோடை போயுள்ளனர். இதில் முக்கியமாக, பில்ட் அப் ஸ்ட்ராங்கு, ஆனால் பேஸ்மென்ட் வீக் ஆன 5 வீரர்களைப் பார்ப்போம். ஊர்பேர் தெரியாத துப்புரவுப் பணி பின்னணி கொண்ட ரிங்கு சிங் 5 சிக்சர்களை…

“தோனியை போல ஒரு கேப்டனை இனி பார்க்கவே முடியாது”- தோனியை பாராட்டிய சுனில் கவாஸ்கர் |former cricket palyer sunil gavaskar talks about dhoni

இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சிஎஸ்கே அணி 2 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. இதுவரை தோனி, சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இந்நிலையில், `முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தோனியைப் போல் எந்த ஒரு கேப்டனும் இருந்ததில்லை’ என தோனியைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். தோனியைப் பாராட்டி பேசிய சுனில் கவாஸ்கர், `சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்று நன்றாகவே தெரியும். அதற்கு தோனியின் கேப்டன்ஷிப்தான் காரணம். 200…

உணவு டெலிவரி, மெசேஜிங் ஆப்களை அதிகம் பயன்படுத்தும் பெண்கள்… ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?|Research says Women use food delivery and messaging apps more

இந்தியாவில் உணவு டெலிவரி மற்றும் மெசேஜிங் ஆப்களை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதாக `Bobble AI’ என்ற உரையாடல் ஊடக நிறுவனம் (conversation media platform) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தும் 8.5 கோடி நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் உள்ள தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட தகவல்கள்…*கடந்த ஆண்டு, ஸ்மார்ட்போன்களில் இந்திய பயனர்கள் செலவழிக்கும் நேரமானது 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.ஸ்மார்ட் போன்* பணிக்குச் செல்லும்…

கிரிக்கெட் வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. பரிசு தொகையை அதிரடியாக உயர்த்திய பிசிசிஐ…

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ அதிரடியாக அதிகரித்துள்ளது.உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கான பரிசுத்தொகை 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல, துலீப் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை 40 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை 30…

பூசணிக்காய் வைத்து ஒரு சூப்பரான பனாரஸி அல்வா செய்யலாமா..? இதோ ரெசிபி..

அல்வா பிடிக்காதவர்களை பார்க்கவே முடியாது. ஏனென்றால், உலகம் முழுவதும் பல வகையான மற்றும் பல சுவைகளில் கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு பண்டங்களில் ஒன்று அல்வா.அப்படி நீங்கள் அல்வா பிரியராக இருந்தால், உத்திரபிரதேசம் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான பனாரஸி அல்வாவினை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்.தேவையான பொருட்கள் :பூசணிக்காய் – 200 கிராம்.சர்க்கரை – ½ கப்.நெய்…

அப்போது அமித் ஷாவின் வக்கீல்; இப்போது ராகுல் காந்தி வழக்கின் நீதிபதி

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சுபைர் அகமதுபதவி, பிபிசி செய்தியாளர்17 ஏப்ரல் 2023, 07:39 GMTபுதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்’மோதி குடும்பப்பெயர்’ வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தன்னை குற்றவாளி என்று அறிவிக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ளார்.போலி என்கவுன்டர் தொடர்பான ஒரு வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வழக்கறிஞராக இருந்த நீதிபதி ராபின் பால் மொகேரா இந்த வழக்கை…

500 வேலைகளைச் செய்யும் உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக உள்ளதா? I Aval vikatan and Kauvery hospital organises a webinar on liver health

குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்பு, துரித உணவுகளின் தாக்கம், கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு விஷயங்கள் குறித்து நிகழ்ச்சியில் பேச உள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் நேரடியாக பதில் அளிக்க உள்ளனர்.குடிப்பழக்கமும் கல்லீரலும்இந்நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.21) மாலை 3.30 முதல் 4.30 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க அனுமதி அவசியம். இதில் பங்கேற்ப முன்பதிவு அவசியம்.முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும். Source link

IPL 2023 Injured Players: `தோனிக்கு காலில் அடி; ரோஹித்துக்கு வயிற்றுவலி!' – யார் உள்ளே? யார் வெளியே?

சேப்பாக்கத்தில் நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் பத்திரிகையாளர் சந்திப்பிற்காக வந்திருந்தார். அந்த சந்திப்பில் ஒரு நிருபர் ஃப்ளெம்மிங்கிடம் கேட்ட கேள்வி,`சென்னை அணியில் காயமடைந்த வீரர்களைப் பற்றிய அப்டேட் கொடுங்களேன்’ என்றார். அதற்கு, `காயங்களைப் பற்றியெல்லாம் பேசினால் ஒரு மணி நேரம் ஆகுமே! அவ்வளவு நேரம் உங்களிடம் இருக்கிறதா?’ எனக்கூறி ஃப்ளெம்மிங் அந்த அரங்கையே கலகலக்க வைத்திருந்தார். ஃப்ளெம்மிங் நகைச்சுவையாகப் பேசியிருந்தாலும் இந்த சீசனில் நாம் நிறைய…

சட்டநாதர் கோயில்: 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம் மற்றும் 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள் கண்டெடுப்பு! | Ancient idols, artifacts, and pedestals found in Chattanathar Temple

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைமை வாய்ந்த சட்டநாதர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வருகிற மே 24-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காகவே கோயில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அப்போது யாகசாலை அமைப்பதற்காகக் களிமண் எடுக்க மேற்கு கோபுர வாயிலில் கோயிலின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டினர்.ஐம்பொன் சிலைகள்அங்கே 2 அடி ஆழத்தில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா ஐயனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்…